சுவைசொட்டும் கருத்துவளமிக்க உரையாடல்களைக் கொண்ட கலைஞர் அவர்களின் 'சிறு நாடகங்களி'ன் தொகுப்பே இந்நூல்!
பகுத்தறிவுக் கருத்துக்களின் ஒளிவீச்சாக - அன்பு இதயங் களின் இன்ப கீதமாக - புன்மைமனம் படைத்தோரின் பொய் யுரைகளைக் கிழித்தெறியும் அறிவு வாளாக பண்டைத்தமிழரின் வீரத்தை தன்மான உணர்வினை விளக்கிடும் உணர்ச்சிக்காவியமாக; தமிழர்தம் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட நான்கு சிறு நாடகங்கள் முறையே, பரதாயணம் - திரைப்படங்களில் இடம் பெற்ற அனார்கலி-சாக்ரடீஸ்-சேரன் செங்குட்டுவன் ஆகிய இந்நூலில் அடங்கியுள்ளன.
தன்மான உணர்வும் தமிழ்ப்பற்றும் மிகுந்த தமிழ்ப்பெரு மக்களுக்கு இந்நூலினை நல்விருந்தாக வழங்குகிறோம்! குறைந்த விலையில் நிறைந்த பயனைத் தருகிறோம். என்றும்போல் ஆதரவு தருக ஆக்கம் பெருகிட;
இது ஒரு நான்மணி மாலை!
பகுத்தறிவு பரப்பிட
பாசமிகு காதலர்களின்
அன்புப் பெருக்கை விளக்கிட,
உலகைத் திருத்த முனைந்த
உத்தமன் ஒருவனின்
மன உறுதிக்கு மகுடம்புனைந்திட,
தமிழர் வீரம்
திக்கெட்டும் வெற்றிக்கு கொடிநாட்டிய
தீரமிகு வரலாற்றைச் சொல்லிட
இந்த நான்கு மணிகளையும்
கோத்துள்ளேன் மாலையாக!
பலமுறை கேட்டது ! படித்தது !
அரங்குகளில் நடித்தது! இருப்பினும்
உங்கள் நூலகத்திலும் அழகுசெய்யட்டுமே
என்பதற்காக, இந்த இரண்டாவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வெளியீட்டு உரிமையுடைய தமிழ்க்கனி பதிப்பகத்தாருக்காக அன்பு நண்பர் மோகனவேலு அவர்கள் எழிலுற இந்த நூலைப்பதிப்பித்து வழங்குகிறார். அவருக்கு நன்றி.
Buy Nanmanimalai by M Karunanidhi from Australia's Online Independent Bookstore, BooksDirect.