முதலாளித்துவத்தின் உடம்புக்குள் உணவாகச் செல்லு கிற தொழிலாளர் வர்க்கம் தேவையான இரத்தத்தை அளித்துவிட்டுக் கழிவுப் பொருளாக வெளியேறுகிறது.
தாயை ஒருவன் கற்பழிக்க முயல்வதைக் கண்டும், காணாதது போல ஒரு மகன் இருப்பானேயானால், அவன் தனது தாய் மொழியைப் பிறமொழி அடிமை கொள்வதையும் பொறுத்துக் கொண்டுதான் இருப்பான்.
உலகைத் திருத்தும் உத்தமன் என்று ஒருவன் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டான். அவன் வீட்டு நிலைக்கண்ணாடிக்கு ரசம் பூசப்படவில்லை. காரணம்; அவன் முகம் அதில் தெரிந்துவிடும் என்பதுதான்!
கடலின் அலைகள் கடும் புயலைப் பயன்படுத்திக் கொண்டு வானத்தைத் தொட்டுவிடலாம் என்று உயர்ந்து உயர்ந்து பார்க்கின்றன. தொட முடியாத கோபத்தால், தன்னைத் தாங்கிக் கொண்டிருக்கும் பூமியின் ஒரு பகுதியை அழிக்க முனைகின்றன. அரசியல்வாதிகள் கூடச் சில பேர் அப்படித் தான் தங்களை வளர்த்த இயக்கத்தை அழிக்க முனைகிறார்கள்.
சிறையில் இருந்த ஓர் அரசியல் கைதிக்கு நாவல்கள் படிப்பதிலோ, இலக்கியங்கள் படிப்பதிலோ நாட்டமில்லை. நெப்போலியன், அலெக்சாண்டர், லெனின், நேரு, நேத்தாஜி, கட்டபொம்மன், பகவத் சிங், சிதம்பரனார் போன்றவர்களின் தியாக வாலாறுகளையும், வீர வரலாறுகளையும், தவிர வேறு எந்த நூலையும் அவர் கையால் தொடுவதில்லை. இப்படி, அந்த மாவீரர்களின் சரித்திரங்களைப் படித்துக் கொண்டிருந்தவரை, ஒருநாள் காலை சிறைக்கூண்டில் காணவில்லை. எங்கே என்று விசாரித்தபோது மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வெளியே போய்விட்டார் என்று சிறைக் காவலர் ஒருவர் விடையளித்தார்.
Buy Sirayil Pootha Chinna Chinna Malargal by M Karunanidhi from Australia's Online Independent Bookstore, BooksDirect.